வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கணும்
'நாமக்கல்: 'வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா ஆலோசனை வழங்கியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளின் ஆரோக்கியத்-திற்கு அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளது. வெப்ப அயற்-சியால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு, நடுக்கம் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் உள்ளது. வெப்பத்தில் இருந்து காப்பாற்ற, கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவேண்டும். போதுமான அளவு தண்ணீர், தீவனம் கொடுக்க வேண்டும். பறவைகளுக்கு நிழற்கூரைகள் அமைத்து, போதுமான நீர் கொடுக்க வேண்டும்.செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நண்பகல் நேரங்களில், மாடுகளுக்கு வெப்பத்தால் அயற்சி ஏற்படாமல் இருக்க, அதன்மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். வெயில் காலங்களில் அதிகப்படியான கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சரியான கோடைகால பராமரிப்பு முறைகளை கையா-ளாவிட்டால், கறவை மாடுகள் வெப்ப அயற்சியால் பாதிக்கப்-பட்டு இறப்பை சந்திக்கும். கறவை மாடுகளின் உடல் வெப்-பத்தை தணிக்க நீர்த்தெளிப்பான் அமைப்பது, குளிர்ந்த நீரை கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகி-யவை மூலம் கோடை வெப்பத்தால் ஏற்படும் அயற்சியை தவிர்க்-கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.