மாணவிக்கு டெங்கு வேலுாரில் சிகிச்சை
நாமக்கல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில், சென்னையை சேர்ந்த தெய்வானை என்ற மாணவி, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த, 28ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, மாணவி தெய்வானைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மாணவியை வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு, மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.