உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி

விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி

குமாரபாளையம், குமாரபாளையம் தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு, விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர். பின், சிறிது நேரம் கழித்து மாணவ, மாணவியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் உள்ளிட்டோர் கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை