உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துணை அஞ்சலகம் மூடல்

துணை அஞ்சலகம் மூடல்

நாமக்கல், 'நாமக்கல் போர்ட் துணை அஞ்சலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது. பொதுமக்கள் அனைத்து சேவைகளையும், தலைமை அஞ்சலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்' என, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் போர்ட் துணை அஞ்சலகம், நேற்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த அலுவலகத்தில் தொடங்கப்பட்ட கணக்குகள் அனைத்தும், நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் இணைக்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள் தங்களது கணக்குகளில் பணம் செலுத்துவதற்கும், பணம் பெறுவதற்கும் மற்றும் அஞ்சல் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும், அருகில் உள்ள நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை