சமயசங்கிலிக்கு பஸ் வசதி கலெக்டரிடம் மனு வழங்கல்
சமயசங்கிலிக்கு பஸ் வசதிகலெக்டரிடம் மனு வழங்கல்நாமக்கல், நவ. 26-குமாரபாளையம், சமயசங்கிலி அக்ரஹாரத்தை சேர்ந்த கிராம மக்கள், பஸ் வசதி கேட்டு கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 'எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால், குமாரபாளையத்தில் இருந்து, சமயசங்கிலி அக்ரஹாரம் வழியாக ஈரோடு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நீண்ட நாளாக இயக்கி வந்த அரசு பஸ்சை, சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.தனியார் மினி பஸ் ஒன்று இயங்கி வந்தது; தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், ஆவத்திபாளையம் முதல் சமயசங்கிலி வழியாக செங்கோட்டைபாளையம் வரை சாலையை சீரமைத்து தர வேண்டும். மயான வசதி இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.