உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் கருவறையில் சூரிய ஒளி படும் நிகழ்வு

கோவில் கருவறையில் சூரிய ஒளி படும் நிகழ்வு

வெண்ணந்துார் : வெண்ணந்துார் அருகே, கல்லாங்குளம் கிராமத்தில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் முதல் மூன்று நாட்களுக்கு, கருவறையில் உள்ள சிவபெருமான் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி, நேற்று புரட்டாசி மாத இரண்டாவது நாள் என்பதால், சூரிய பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர், சூரியனார், அண்ணாமலையார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, காலை, 6:15 மணிக்கு சூரிய ஒளி, கோவில் ராஜகோபுர வாசல் வழியாக வந்து கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது படும் அதிசய நிகழ்வு நடந்தது. அப்போது மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !