உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆமை வேகத்தில் தார்ச்சாலை பணிவிவசாயிகள்,பொது மக்கள் பாதிப்பு

ஆமை வேகத்தில் தார்ச்சாலை பணிவிவசாயிகள்,பொது மக்கள் பாதிப்பு

குளித்தலை,:கூடலூர் பஞ்., பேரூரிலிருந்து தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில், தொப்பமடை வரை புதிய தார்ச்சாலை பணி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. யூனியன் பொது நிதியிலிருந்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டு வரும் தார்ச்சாலை, கற்கள் பெயர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் உள்ளது. பணி தொடங்காமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.இச்சாலையில் செல்லும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய தார்ச்சாலை பணியை கலெக்டர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !