வரியினங்கள் பாக்கி; டவுன் பஞ்., நடவடிக்கை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் குடிதண்ணீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவைகளில் பலர், 2 ஆண்டுகளுக்கு மேல் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள் இந்தாண்டு முடிவதற்குள் முழுவதும் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீண்ட நாட்கள் வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.