மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
ஆசிரியரை விசாரணைக்குஅழைத்து சென்ற போலீசார்
30-Jan-2025
'வில்லங்கமாக விளையாடிய' உடற்கல்வி ஆசிரியர் கைது
29-Jan-2025
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த வீரப்பம்பாளை-யத்தில், பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 41 மாணவ, மாணவியர் படித்து வரு-கின்றனர். இங்கு, அறிவியல் ஆசிரியராக நந்தகுமார், 54 பணி-யாற்றி வந்தார். அவர் மீது மாணவி ஒருவர், 'பேட் டச்' செய்வ-தாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 5 பேர் கொண்ட குழந்தைகள் நலக்குழுவினர், பள்ளிக்கு சென்று புகா-ருக்குள்ளான ஆசிரியர் மற்றும் பெற்றோர், மாணவியிடம் விசா-ரணை நடத்தினர்.விசாரணையில், ஆசிரியர் நந்தகுமார், பாலியல் ரீதியாக மாண-விக்கு தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஆசிரியர் நந்த குமார் மீது, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், கடந்த, 30-ல் ஆசிரியர் நந்தகுமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பச்சமுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் நந்தகு-மாரை, நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
23-Jan-2025
30-Jan-2025
29-Jan-2025