உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

நாமக்கல்: 'மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழ-கத்திலும் சம்பளம் வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின், பள்ளிக்கல்வித்துறையில் மேல்நிலை வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களில், 2009 ஜூன், 1க்கு பின், பணியில் சேர்ந்த, முதுகலை ஆசிரியர்கள் பெரிதும் சம்பள முரண்பாடுக-ளோடு பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, 2009 ஜூன், 1க்கு முன் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட இவர்கள் ஒவ்வொரு மாதமும், 14,000 ரூபாய் குறைவாக சம்பளம் பெறு-கின்றனர். இது சார்ந்து ஏற்கனவே தமிழக முதல்வருக்கும், பள்-ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.தமிழக முதல்வர், இது குறித்து நடவடிக்கை எடுத்து, முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும். 1978ல் முதுகலை ஆசிரியர்களின் சம்பளத்திற்கும், கல்லுாரி விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கும், 3.7 சதவீதம் மட்-டுமே வித்தியாசம் இருந்தது. தற்போது, 53.2 சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும், தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்கள், 6 முதல், பத்தாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களைவிட குறைவான சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இதுகு-றித்து நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்க-ளுக்கு இணையாக, தமிழகத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தையை, முது-கலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உடனடியாக நடத்த வேண்டும்.இவ்-வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை