உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இடமாறுதல் கவுன்சிலிங்கில் காலிப்பணியிடத்தை மறைத்ததால் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடமாறுதல் கவுன்சிலிங்கில் காலிப்பணியிடத்தை மறைத்ததால் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், இடமாறுதல் கவுன்சிலிங்கில் காலி பணியிடத்தை மறைத்ததால், ஆவேசமடைந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில், 2025-26ம் கல்வியாண்டுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. அதன்படி, நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளியில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. மாவட்டத்தில், ப.வேலுார் ஒன்றியம், பிள்ளக்களத்துார் பஞ்., நடுநிலைப்பள்ளி, ராசிபுரம் ஒன்றியம், அணைப்பாளையம் பஞ்., நடுநிலைப்பள்ளி, கபிலர்மலை ஒன்றியம், கொளக்காட்டுப்புதுார் பஞ்., நடுநிலைப்பள்ளி என, மொத்தம், மூன்று காலி பணியிடங்களுக்கு, 29 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று நடந்த இடமாறுதல் கவுன்சிலிங்கில், 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது, பரமத்தி ஒன்றியம், பிள்ளைக்களத்துார் பஞ்., நடுநிலைப்பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மறைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், கவுன்சிலிங் நடந்த பள்ளியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.'இடமாறுதல் கவுன்சிலிங்கில், காலி பணியிடங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி நியாயமான முறையில் நடத்த வேண்டும். முறைகேடான வகையில் நடத்த முற்பட்டால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்' என, கூட்டணி செயலாளர் கலைச்செல்வன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி