உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் திறந்த சமுதாய கூடம் செப்., 2ல் டெண்டர் அறிவிப்பு

முதல்வர் திறந்த சமுதாய கூடம் செப்., 2ல் டெண்டர் அறிவிப்பு

மோகனுார், மோகனுாரில் பிரசித்தி பெற்ற நாவலடியான் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக, குறைந்த கட்டணத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, தமிழக அரசு, 2021-22ல், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து, மோகனுார்-காட்டுப்புத்துார் சாலை நாவலடியான் கோவில் அருகில், சமுதாய கூடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், கடந்த மே மாதம், தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு வராமல், வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதுகுறித்து, கடந்த, 11ல், நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதன் எதிரொலியாக, வரும் செப்., 2ல் ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிபாசிட் தொகை, 10 லட்சம் ரூபாய், சொத்து மதிப்பு சான்று, ஒரு கோடி ரூபாய், சொத்து மதிப்பு சான்று இல்லாதவர்கள், டிபாசிட் தொகை, 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ