உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு

இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு தங்கமணி அழைப்பு

பள்ளிப்பாளையம்:இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, நிர்-வாகிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதில், மக்-களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மூலம், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வரும், 19ல் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி; 20ல் நாமக்கல், பரமத்தி வேலுார் தொகுதி; 21ல் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கு வருகை தருகிறார்.இந்த மாபெரும் எழுச்சி பயணம், தி.மு.க., அரசுக்கு முடிவு கட்டும் பயணமாக அமைய வேண்டும் என்பதை, நாம் அனை-வரும் மனதில் உறுதியேற்று தாங்களும், தங்கள் கிளை, வார்டு, பூத், சார்பு அமைப்பு நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.நிர்வாகிகள் அனைவரும், இ.பி.எஸ்., பேச்சை அமைதியாக முழுவதும் கேட்டு, எழுச்சி பயணம் சிறப்பாக அமைய ஒத்து-ழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை