மேலும் செய்திகள்
ரூ.2 கோடியில் திட்டப்பணி தங்கமணி துவக்கி வைப்பு
27-Sep-2025
பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், 87.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பழைய சின்னாகவுண்டம் பாளையம், கிழக்குதொட்டிபாளையம், தாஜ்நகர், அன்னை சத்யாநகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதியில், குமாரபாளையம் சட்டசபை மேம்பாட்டு நிதியில் இருந்து மேல்நிலைதொட்டி, சிறுபாலம், மழைநீர் வடிகால், குடிநீர் டேங்க், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட, 87.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது.முன்னாள் அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மேலும், பழைய சின்னா கவுண்டம்பாளையம் பகுதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் செந்தில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Sep-2025