மேலும் செய்திகள்
தன்னாசி முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா
05-Aug-2025
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், அத்தனுார் டவுன் பஞ்., பகுதியில் தாழ முனியப்பன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று சுவாமி ஊர்வலத்துடன், பொங்கல் திருவிழா தொடங்குகிறது. இரவு தாழ முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது.நாளை காலை, பொங்கல் திருவிழா நடக்கிறது. இதில், அத்தனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து தாழமுனியப்பனை வழிபடுவர். இரவு, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
05-Aug-2025