மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
09-Aug-2025
குமாரபாளையம்: ஆவணி அவிட்டத்தையொட்டி, குமாரபாளை-யத்தில் பூணுால் திருவிழா கொண்டாடப்படு-வது வழக்கம். அதன்படி, சேலம் சாலை, சவுண்-டம்மன் கோவில் மற்றும் ராஜா வீதி சவுண்-டம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பூணுால் அணிந்து அம்மனை வழிபட்டனர். பின், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலிருந்து ஊர்வ-லமாக சென்ற வீரகுமாரர்கள், கத்திபோட்டு ஆடி-யபடி, சேலம் சாலை, கத்தாளபேட்டை, ராஜா வீதி, காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அம்மனை அழைத்து வந்தனர்.வீரமுண்டி வேடமிட்ட நபர்கள், வீர குமாரர்களை எதிர்க்கும் விதமாக போர் புரிந்தது, காண்போரை பரவசமடைய செய்தது.
09-Aug-2025