உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ராசிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார், 56. குடும்பத்துடன் சேலத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் ராசிபுரம் நோக்கி, நேற்று மதியம் வந்து கொண்டிருந்தனர். ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்த போது, காரின் கண்ணாடியை இறக்க முயற்சித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள், காரை பள்ளத்தில் இருந்து வெளிய எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை