உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் துாக்குத்தேர் விழா

பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் துாக்குத்தேர் விழா

நாமக்கல், நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் துாக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி, மே, 11ல் சக்தி அழைப்பு, காப்பு கட்டு, 12ல் பூச்சாட்டு விழா, 18ல் மறுகாப்பு, 25ல் வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, அபிஷேகம், ஆராதனை, அம்மன் அலங்காரம், துாக்குத்தேரில் ரத உற்சவ நிகழ்ச்சி நடந்தது.ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக செய்யப்பட்ட துாக்குத்தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை வைத்து ஊர் முழுவதும் துாக்கிச்சென்று திருவீத உலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாவிளக்கு, பொங்கல், வசந்தோற்சவம் நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம், 29ல் கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை