உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் விழா நிலைக்கு சென்றது தேர்

மாரியம்மன் கோவில் விழா நிலைக்கு சென்றது தேர்

ராசிபுரம்: ராசிபுரம்-நாமக்கல் சாலையில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசியில், தேர் திரு-விழா நடப்பது வழக்கம்.அதன்படி கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 23ல் கம்பம் நடும் விழா நடந்தது. வரும் நவ., 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிக்கு, கொடியேற்றமும் நவ., 5ல் பொங்கல் வைபவமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, தீமிதி விழாவும், மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, டி.எஸ்.பி., விஜ-யகுமார் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைதத்தனர். தேர் கடைவீதி வழியாக சென்று பூக்கடை வீதி எதிரே நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, மீண்டும் தேர்வடம் பிடித்தனர். கடைவீதி, சேலம் ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள நிலைக்கு வந்து சேர்ந்தது. இன்று சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி