மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் முதலாவது மாநாடு
நாமக்கல், நாமக்கல் மாவட்ட, மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் முதலாவது மாநாடு நடந்தது.நாமக்கல் சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடந்த மாநாட்டிற்கு, அதன் தலைவர் லதா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், மதிப்பெண் முறையை கைவிட வேண்டும். சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும். சம்பளம், பிரதி மாதம் 7ம் தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி, சம்பள உயர்வு தர வேண்டும். உபகரணங்கள், பெட்ரோல் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சத்யா, பொருளாளர் மகாசத்யா, துணைத் தலைவர் புனிதா, துணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.