உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது

அரசு பள்ளி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி கரட்டாங்காடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு முன் பகுதியில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிக்கு தேவையான மண்ணை, சில மாதங்களாக முன்புறம் உள்ள சுற்றுசுவர் ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம், தொடர் மழை காரணமாக, பள்ளியின் சுவரோடு ஒட்டியிருந்த மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு, சுற்றுச்சுவரையும் பாதித்துள்ளதால், சுற்றுச்சுவரும் ஈரப்பதமாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, முன்பகுதியில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ