மேலும் செய்திகள்
போனஸ் பேச்சுவார்த்தை; போராட்டம் நடத்த முடிவு
16-Oct-2024
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர்இன்று காத்திருப்பு போராட்டம்பள்ளிப்பாளையம், அக். 25-தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தையை, உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விதைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், பேச்சுவார்த்தை நடத்தி சதவீதம் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி போனஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.கடந்த 5ம் தேதி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த கடிதம் கொடுத்தனர். ஆனால், உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.வழக்கமாக, ஒரு மாத்திற்கு முன்பே விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தை என்பது, தொழிற்சங்கங்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இறுதியாக ஒப்பந்தம் முடிவாகும். தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை துவங்கவில்லை.எனவே, உடனடியாக போனஸ் பேச்சு வார்த்தையை துவக்க கோரி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில், பள்ளிப்பாளையம் வருவாய்துறை அலுவலகம் முன் இன்று (25 தேதி) விசைத்தறி தொழிலாளர்களை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
16-Oct-2024