உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.106 ஆக நிர்ணயம் சில்லறை விலையில் ரூ.240க்கு விற்பனை

கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.106 ஆக நிர்ணயம் சில்லறை விலையில் ரூ.240க்கு விற்பனை

நாமக்கல்: கறிக்கோழி கொள்முதல் விலை, 106 ரூபாயாக நிர்ணயம் செய்-துள்ள நிலையில், சில்லறை விலையில், 240 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்படுவதால், இறைச்சி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்-துள்ளனர்.தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்-பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்-ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகி-றது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தீபாவளி பண்டிகையின் போது கொள்முதல் விலை, 111 ரூபா-யாக நிர்ணயம் செய்த நிலையில், சில்லறை விலையும், 200 ரூபாய் தாண்டியது. தற்போது, சில்லறை விலையில், ஒரு கிலோ, 220 முதல், 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, சில்லறை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது விற்பனை அதிக-ளவில் காணப்படும். பல்லடம் ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) ஒரு கிலோ, 106 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்தது. ஆனால், எங்களுக்கு, 128 ரூபாய் என நிர்ணயம் செய்-கின்றனர். அதையடுத்து, வண்டி ஏற்று, இறக்கு கூலி, இறப்பு, பராமரிப்பு என கணக்கிட்டு, உயிருடன் ஒரு கிலோ, 158 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ கறி, 220 ரூபாய்க்கும், தோல் உரித்தது, ஒரு கிலோ, 240 ரூபாய்க்கும் விற்-பனை செய்கிறோம். கொள்முதல் விலை குறையும் போது, சில்-லறை விலையையும் அதற்கேற்ப நாங்கள் குறைத்து விற்பனை செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை