ராசிபுரத்தில் ரூ.1.62 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வரல...
ராசிபுரம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஓராண்டாகியும், பயன்-பாட்டுக்கு கொண்டு வராமல் பள்ளி கட்டடத்தை வீணடிப்பதாக புகார் எழுந்துள்ளது. ராசிபுரம் யூனியன், சந்திரசேகரபுரம் பஞ்., ஓனாங்கரடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 150க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளிக்கு போதிய கட்டட வசதி இல்லை என்பதால், கடந்த, 2022ல் நபார்டு திட்டத்தில், 1.62 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கட்-டட கட்டுமான பணி கடந்தாண்டு நிறைவடைந்தது. இதைய-டுத்து முதல்வர் ஸ்டாலின், கடந்த, 2024 அக்., 22ல் வீடியோ கான்பரன்சிங் மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார்.புதிய வகுப்பறைகள் திறந்து வைத்தும் மாணவர்கள் யாரும் இங்கு வரவில்லை. இந்த கல்வி ஆண்டிலாவது மாணவர்கள் புதிய வகுப்பறைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டும் புதிய கட்டடத்தை பயன்படுத்தவில்லை. 1.62 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் கடந்த, 10 மாதங்களாக வீணடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிரமப்படுகின்றனர் என்ற என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் இந்த கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கடந்த, 10 மாதமாக மாண-வர்கள் சிரமங்களுக்கு இடையே படித்து வருகிறார்கள் என்பது தான் வேதனை என, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது, இந்த அறைகளில் ஒப்பந்த தொழில் செய்யும் வெளி-மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். எனவே, உடனடியாக மாணவர்களை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர்களிடம் கேட்டபோது, 'புதிய கட்டடத்-திற்கு தண்ணீர் வசதி இல்லை. மேலும், கூடுதல் வகுப்பறை, கழிவறை கட்டும் பணி நடப்பதால் மாணவர்களை அங்கு மாற்-றவில்லை' என்றனர்.