மார்கழி அதிகாலையில் ஒலிக்கும் சுப்ரபாதம்
ராசிபுரம்: தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாத-மாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகாலையில் எழுந்து, குளித்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மேலும் அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகா-லையில் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் சுப்ரபாதம் போன்றவை ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 55. இவர் மார்கழி மாதம் தொடங்கிய நாள் முதல், தினமும் அதிகாலையிலேயே எழுந்து தனது இருசக்கர வாகனத்தில் செல்கிறார். வாகனத்தில் பிரத்யேகமாக பேட்டரி விளக்கு வெளிச்சத்துடனும், சிறிய ஒலிபெருக்கியுடனும் பட்-டணம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடத்தெரு மற்றும் சிவக்குமார் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறார்.அப்போது அவர், ஒலிபெருக்கியில் சுப்ரபாதம் ஒலிக்க செய்தவாறும், 'வெங்கட்ரமணா... கோவிந்தா... கோவிந்தா...' எனப் பக்தி முழக்கங்களை எழுப்பிய-வாறும் செல்கிறார். இவரது செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.