உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

கெரசினுடன் வந்த பெண்ணால் பரபரப்புநாமக்கல், அக். 1--நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சித்துார்நாடு பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள், 41. இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவரை பரிசோதனை செய்தபோது, அவரது கையில் இருந்த பையில், பாட்டிலில் மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், போலீசில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ