உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம்: எலந்தகுட்டை பகுதியில், டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.சங்ககிரி அருகே சன்னியாசிபட்டியை சேர்ந்த ராஜவேல், 57, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியில் விவசாய தோட்-டத்தில் டிராக்டரில் நிலக்கடலை ஏற்றி கொண்டு இருந்தார்.அப்போது டிராக்டரில் இருந்து, நிலை தடுமாறி கீழே விழந்-துள்ளார். இவர் மேலே நிலக்கடலை மூட்டை விழுந்தது. இதில் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியி-லேயே ராஜவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ