பழைய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வேண்டும்
நாமக்கல், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு செயல்படுத்தக்கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில், கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல்-மோகனுார் சாலையில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நகர பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, பழைய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நாமக்கல் மாநகராட்சி, 33வது வார்டில் சாக்கடை வசதி இல்லாமல் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய்தொற்று அபாயமும், அப்பகுதில் தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.