உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேர்த்திருவிழா பணிகள் மும்முரம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேர்த்திருவிழா பணிகள் மும்முரம்

மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்த-சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் கலந்துகொள்வர். கிட்டத்தட்ட, மூன்று மாதத்திற்கு பக்-தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும். இந்தாண்டு, வரும் பிப்., 7ல், கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, தைப்பூச திருநா-ளான, 11 மதியம், 2:30 மணிக்கு கோவிலை சுற்றி திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பர். 13ல் சத்தாபரண மகாமே-ருவும், 14ல் வசந்த விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.இத்திருவிழாவிற்கென தனித்துவம் பெற்ற சேர்மிட்டாய் கடைகள் அதிகளவில் நிறைந்து காணப்படும். மேலும், குழந்தை-களுக்கான விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பெண்கள் அழகுசாதன பொருட்கள், பலகார கடைகள் என பல்வேறு கடைகள் கோவிலில் ஆரம்பித்து சாலை வரை, 150 அடி மீட்டர் துாரத்திற்கு அணிவகுத்து காணப்படும்.இக்கடைகள் அமைப்பதற்காக, தற்போது கோவில் முன்புறம் தற்காலிக தகர கொட்டகைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணியில், ஏராளமான பணியாளர்கள் ஈடு-பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ