உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் ஐந்தாம் வார பயிற்சி வகுப்பு நடந்தது. திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அரங்கராசு, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடந்தது. திருச்செங்கோடு மேற்கு நகர தி.மு.க., பொறுப்பாளர் நடேசன், கிழக்கு நகர தி.மு.க., பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒழுக்கம், உடைமை, பொறையுடைமை அதிகாரங்களை, ஆறுமுகம், கைலாசம், திருமலை ராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ