உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி

மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம், தமிழ் கழகம் சார்பில் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 13வது வாரமாக திருக்குறள் பயிற்சி, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ஹரி பாஸ்கர் வர-வேற்றார்.ஆசிரியர்கள் ஹேமலதா, சுர்சிதா, காளியம்மாள் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் பெரி-யசாமி தலைமையில், திருக்குறளின் மேம்பாடு, தமிழக அரசு திருக்குறளுக்காக செய்து வரும் பணிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஒரு நல்ல அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என, திருக்குறளில் இருப்பதை விளக்கினார்.மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் நான்கும் அரசனுக்கு இருப்-பது இயல்பாக இருக்க வேண்டும்.விரைந்து செய்தல் கல்வி, வீரம் இம் மூன்றும் அரசை ஆளக்கூடி-யவருக்கு தகுதியாகும். பொருளை தேடி சேர்த்து பாதுகாத்து, காத்த பொருளை உரிய வழியில் செலவிடக் கூடியதாக அரசு அமைத்தல் வேண்டும்.மக்களுக்கு எளிமையாகவும், கடும் சொல் அற்றவனாகவும் இருப்-பவன் அரசை, உலகம் போற்றும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்