மேலும் செய்திகள்
குருபூஜை விழா
30-Mar-2025
வெண்ணந்துார்:கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில், திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை விழா நடந்தது. சிவபக்தியில் சிறந்து விளங்கிய, 63 நாயன்மார்களில், திருநாவுக்கரசு நாயனார் சிறப்பு வாய்ந்தவர். தேவாரம் பாடிய மூவரில், ஒருவராகவும் இருக்கிறார். இவர் கோவில் உழவாரப்பணியை தலையாய பணியாக செய்து வந்தார். சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில், சிவாலயங்களில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, வெண்ணந்துார் யூனியன், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில், நேற்று திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை நடந்தது. இதில், திருநாவுக்கரசு திருமேனிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. கல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்களும், தேவார பாடல்களை பாடி வழிபட்டனர்.
30-Mar-2025