உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுத்திகரித்த கழிவுநீர் தேவைப்படுவோர் மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம்

சுத்திகரித்த கழிவுநீர் தேவைப்படுவோர் மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாநகராட்சியில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், விடுபட்டுள்ள பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.திட்டம் நிறைவு பெற்று, ஐந்தாண்டுகளுக்கு இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணியை டி.என்.சி.ஆர்.யு.டி.பி., திட்டம் மூலம், 211.83 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள கடந்த, 2024 மார்ச், 12ல் உத்தரவு வழங்கப்பட்டு பணி துவங்கப்பட்டது.மேலும், இத்திட்டத்தில், 11.13 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மாநகராட்சிக்கு சொந்தமான கொசவம்பட்டி உரக்கி-டங்கு பகுதியில், வரும், 2026 செப்., 30க்குள் நிறுவப்பட உள்-ளது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிக்-கப்பட்ட நீர், விவசாயம் மற்றும் இதர தொழிற்சாலைகள் பயன்-பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவையுள்ள விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், நாமக்கல் மாநகராட்சி பொறி-யியல் பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை