உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்றணும்: கலெக்டர்

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்றணும்: கலெக்டர்

நாமக்கல்: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல் கவிஞர் ராம-லிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், பல்வேறு விழிப்பு-ணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:ஒவ்வொரு குடிமகனின் ஓட்டும், இந்தியாவின் தலையெ-ழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் ஆணையம். ஜன., 25ல், இளைஞர்களுக்கு ஓட்டளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், 1950 ஜன., 25ல், தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு-தோறும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓட்டுரிமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் ஓட்டுப்போட வைக்கும் நோக்கத்தில், தேசிய அளவில் வாக்-காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.பதினெட்டு -வயது பூர்த்தியடைந்த அனைவரும், கட்டாயம் வாக்காளர் அட்டை பெற்று, தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், கல்லுாரி முதல்வர் கோவிந்-தராசு, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி