உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சமூக ஆர்வலர் என்ற பெயரில் மிரட்டல்; ராசிபுரம் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

சமூக ஆர்வலர் என்ற பெயரில் மிரட்டல்; ராசிபுரம் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

ராசிபுரம்: ''சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர், நகராட்சி அதிகாரிகளை மிரட்டி செயல்படாமல் தடுத்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா கூறினார்.நாமக்கல் மாட்டம், ராசிபுரம் நகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த கவிதா, தலைவராக உள்ளார். இவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராசிபுரம் நகராட்சியில், தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து முடித்துள்ளோம். ஆனால், அதை விரும்பாத ஒருசிலர் சமூக ஆர்வலர் என்ற பெயரில், ஆர்.டி.ஐ., விஜிலென்ஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு, இங்குள்ள அதிகாரிகள், ஊழியர்களை மிரட்டி வருகின்றனர். வேலை செய்ய விடாமல் பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து விட்டு, நேரில் வந்து அதிகாரிகளை மிரட்டுகிறார். இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த பல்வேறு வதந்திகளை, இயக்கங்கள், சங்கங்கள் என்ற பெயரில் பரப்பி வருகின்றனர். பொய்யான தகவலை பரப்புவது மட்டுமின்றி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி