உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெறி நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலியாகின.புதுச்சத்திரம் யூனியன், நாட்டாமங்கலம் பஞ்., குட்டமூக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 45, ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற பின், மாலை 6:00 மணியளவில் பட்டியில் கட்டி விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்தபோது, முன்புறம் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகளை, வெறி நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்தது.ஆடுகளை இழந்த விவசாயிக்கு, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை