உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெப்படையில் திக்... திக்... நிமிடங்கள்...

வெப்படையில் திக்... திக்... நிமிடங்கள்...

கூகுள் மேப்'பில் ஏ.டி.எம்.,கள்கேரளா மாநிலம், திருச்சூரில், ஏ.டி.எம்., இயந்திரங்களை வெல்டிங் மிஷினால் உடைத்து, பணத்தை கொள்ளை அடித்து தப்பிய வடமாநில கொள்ளையர்களை, நேற்று நாமக்கல் மாவட்-டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.இவர்கள், ஏ.டி.எம்., கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன், 'கூகுள் மேப்'பை பயன்படுத்தி, எஸ்.பி.ஐ., வங்கியின், ஏ.டி.எம்.,கள் எங்கெங்கு உள்ளன. அதில் எப்போதெல்லாம் பணம் நிரப்புவர் என்ற தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அதன்பின், திட்டமிட்டு ஏ.டி.எம்.,மில் உள்ள பணத்தை கொள்-ளையடிக்கின்றனர்.சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்புஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டு பிடித்த இடத்தில், கன்-டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருவதால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டுள்ளது.வெள்ளை நிற காரில்...ஏ.டி.எம்., கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடித்துக்-கொண்டு வெள்ளை நிற, ஹூண்டாய் கிரெட்டா' காரில் தப்பிச் செல்வதாக, தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து செக்போஸ்ட்களிலும், போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வெள்ளை நிற கார்களை சோதனை செய்தனர். இந்நிலையில் உஷாரான கொள்ளையர்கள், கொள்ளையடித்த பணத்துடன், கன்டெய்னர் லாரியில் பதுங்கிய-படி தப்பிச் செல்ல முயன்றனர். இவர்கள் இதுபோன்ற கொள்-ளைக்கு, கன்டெய்னர் லாரியை பயன்படுத்துவது வாடிக்கை என, போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களுக்கு 'தர்ம அடி'ஏ.டி.எம்., கொள்ளையர்களை, நாமக்கல் மாவட்ட போலீசார் பிடிக்க முற்பட்டபோது, கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்று, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதிவிட்டு அதி-வேகமாக சென்றனர். இருப்பினும், சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த பொது-மக்கள் லாரி டிரைவரை பிடித்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்-தனர். மக்களிடம் இருந்து லாரி டிரைவரை மீட்ட போலீசார், லாரியை ஆளில்லா இடத்திற்கு கொண்டு சென்றனர்.நீதிபதி ஆய்வுஏ.டி.எம்., கொள்ளையர்களை, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பா-ளையம், வெப்படை அருகே, செட்டியார் கடை என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில், நேற்று மாலை, 7:30 மணிக்கு, திருச்செங்கோடு குற்ற-வியல் நீதிபதி மாலதி, விசாரணை நடத்தினார். அப்போது, போலீ-சாரிடம் நடந்த சம்பவங்களை குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை