உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தென்னையில் போரான் சத்து குறைபாட்டை தவிர்க்க யோசனை

தென்னையில் போரான் சத்து குறைபாட்டை தவிர்க்க யோசனை

நாமகிரிப்பேட்டை: தென்னையில் போரான் சத்து குறைபாட்டை தவிர்க்க, நாமகிரிப்-பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: தென்னையில் போரான் சத்து பற்றாக்குறை இருப்பின், புதிதாக உருவாகும் இளம் இலைகள் சிறயதாக இருக்கும். சிற்றிலைகள் வடிவம் மாறி காணப்படும். காய்கள் உதிர்தல் அதிகமாக இருக்கும். குறைவான மற்றும் இயற்கைக்கு மாறான பழங்கள் உருவாகும். இதனை நிவர்த்தி செய்ய மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போராக்ஸ், 0.2 முதல் 0.5 கிலோ கிராம் மண்ணில் அளிக்க வேண்டும். அல்லது போராக்ஸ், 0.2 சதவீதம் இலை தெளிப்பாக அளித்து போரான் சத்து குறைப்பாட்டை குறைக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை