டி.என்., ஸ்கில்ஸ் திறன் திருவிழா போட்டி 1,105 பேர் பங்கேற்பு; 1,604 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்: மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் நடந்த, 'டி.என்., ஸ்கில்ஸ் திறன்' திருவிழா போட்டியில், 1,105 பேர் பங்கேற்றனர். 1,604 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், மாநில இளைஞர்-களின் திறமைகளை, உலக தரத்தில் வெளிப்படுத்த, 'டி.என்., ஸ்கில்ஸ்-2025 - திறன் திருவிழா' போட்டி, 'நான் முதல்வன்' திட்-டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோர், 'இந்-தியா ஸ்கில்ஸ்-2026' எனும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர். அதில் வெற்றி பெறுவோர், உலக திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.முதன் முறையாக அரசு தேர்வு இயக்ககம் சார்பில் நடக்கும் இத்-தேர்வு, காலை, 11:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடந்-தது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைபள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஜெய்விகாஸ் மேல்நிலைப்-பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய, ஒன்பது மையங்களில், இத்தேர்வு நடந்தது.அதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 2,709 பேர் விண்ணப்-பித்திருந்தனர். இத்தேர்விற்காக, ஒன்பது முதன்மை கண்காணிப்-பாளர்கள், ஒன்பது துறை அலுவலர்கள் மற்றும் 146 அறை கண்-காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று நடந்த இத்-தேர்வில், 1,105 பேர் பங்கேற்றனர். 1,604 தேர்வர்கள் பங்கேற்க-வில்லை.