மேலும் செய்திகள்
சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
09-Apr-2025
நாமக்கல்:நாமக்கல், ஸ்ரீராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவின், 111ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, கோட்டை முல்லை மஹாலில், இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், அர்ச்சனை, தீபாராதனை, திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் ஆகியவை நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை, 6:00 மணிக்கு ராமர்பட ஆவாகனம், 8:00 மணிக்கு அஷ்டபதி மற்றும் பஜனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனை நடக்கிறது.மே, 7 காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை, 6:00 மணிக்கு திவ்யநாமம், வசந்தகேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடக்கிறது. மே, 8 காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.
09-Apr-2025