உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1 கோடி பரிசுக்கான போட்டி பதிவு செய்ய இன்று கடைசி நாள்

ரூ.1 கோடி பரிசுக்கான போட்டி பதிவு செய்ய இன்று கடைசி நாள்

ராசிபுரம்: 'பள்ளி மாணவர்களுக்காக, மத்திய அரசு நடத்தும் ஒரு கோடி ரூபாய் பரிசுக்கு, பதிவு செய்ய இன்று கடைசி நாள்' என, தமி-ழக, பா.ஜ., மத்திய நலத்திட்டப்பிரிவின் இணை அமைப்பாளர் லோகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கு-விக்க, மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிக பரிசு தொகை கொண்ட, 'பில்டத்லான்' என்ற பெயரில் போட்டி அறிவிக்கப்பட்டு பதி-வுகள் நடந்து வருகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் www.vbb.mic.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இன்று, 6ம் தேதி கடைசி நாள் என்-பதால், ஆர்வமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாண-வர்கள், இன்று மறக்காமல் பதிவு செய்ய மாவட்ட, பா.ஜ., கேட்டுக்கொள்கிறது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை பதிவு செய்து உதவலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை