உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதிக்கு கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், தாளவாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்று, கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் காய்கறி மொத்த வியாபாரி கூறியதாவது: மழையால் தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ