கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சேந்தமங்கலம்: விடுமுறை தினத்தையொட்டி, நேற்று கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மூலிகைகள் நிறைந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மாசிலா அருவி, நம் அருவிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.ஆனால், ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அதை ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள், அருவியின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து, அரப்பளீஸ்வரர் கோவில் ,எட்டுக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, படகு இல்லத்தில் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.