வாரச்சந்தைக்கு பொதுமக்கள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம்
ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. நாளை, இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக வந்து சுல்தான்பேட்டை சந்தை ரோடு வழியாக காவிரி ஆற்றுக்கு செல்கிறது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சுல்தான்பேட்டை வாரச்சந்தை முன்னதாக, நேற்று நடந்தது. வியாபாரிகள் குறைந்தளவே வந்தனர். பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.டவுன் பஞ்., மற்றும் ஏல குத்தகைதாரர்கள் மூலம் தண்டோரா போட்டு மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் பொதுமக்கள் வராததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:தொடர்ந்து திருமண விசேஷங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மிகக் குறைந்தளவே சந்தைக்கு வந்தனர். மேலும், வெளியூர் மக்கள் பொருட்களை வாங்க சந்தைக்கு வராததால் வெறிச்சோடியது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.