மேலும் செய்திகள்
சூறாவளியுடன் கனமழை சேந்தமங்கலத்தில் 'கரன்ட் கட்'
05-Oct-2024
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக, நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல், பல இடங்களில் சிறு சிறு அருவிகள் ஏற்பட்டு, மழைநீர் கொட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால், 20வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சாய்ந்தன. இதேபோல், நேற்று காலை பெய்த மழையால் சோளக்காட்டில் இருந்து குழிவலவு செல்லும் சாலையில் இருந்த, 5க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் கிடந்த மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
05-Oct-2024