உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூச்சி மேலாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி

பூச்சி மேலாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி

நாமகிரிப்பேட்டை,:நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில், பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், செம்மண் காடு கிராமத்தில் வேளாண் பூச்சிகள் மற்றும் நோய்கள் தொடர்பான சிக்கல்களை குறைக்க, தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து கிராம விவசாயிகளிடம் உழவுப்பணி, பயிர்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய அடிப்படை விளக்கம், அதன் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது. பூச்சி விரட்டும் மூலிகை, பூச்சியை விரட்டும் ரசாயன பயன்பாடு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவியர் விவசாய நிலங்களில் நேரில் சென்று, பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இயற்கை மூலம் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், அதனை விரட்டும் முறைகள் குறித்து விரிவாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி