இடைத்தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, மாநக-ராட்சி மாமன்ற கூட்டரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மணீஷ் தலைமையில், பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, மாவட்ட அளவிலான தேர்தல் பிரிவு அதிகாரி மகேஸ்வரி கூறியதாவது: தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் முடியும் வரை தங்களது பணிகளுக்காக, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டல பகுதிக்கு பொறுப்-பானவர்கள். இவர்கள் ஓட்டுசாவடிகளை தணிக்கை செய்ய வேண்டும். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த அறிக்கையை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அங்குள்ள அடிப்-படை வசதி கள், கடந்த கால தேர்தல் தொடர்பான விபரங்களை சேகரித்து அறிந்து கொள்ள வேண்டும். தேர்தலின் போது எந்த-வித புகார்களும் ஏற்படாதவாறு, மண்டல அலுவலர்களின் பணி இருக்க வேண்டும். எந்த ஓட்டுச்சாவடியிலும், மறு ஓட்டுப்பதிவு நடக்கும் சூழல் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்-பட வேண்டும். இவ்வாறு கூறினார். 24 மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.