மலைவாழ் மக்களுக்கு பயிற்சி
கொல்லிமலை: கொல்லிமலையில், ஏகல் வித்யாலயா சார்பில் பழங்குடியின மக்-களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பழங்குடியின பெண்கள், விவசாயிகள் கலந்துகொண்-டனர். கூட்டத்தில், பழங்குடியினர் மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், அதை பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. திட்டங்களை பெற செல்ல வேண்-டிய துறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்தனர்.திருச்செங்கோடு தனியார் கல்லுாரி சார்பில், ஸ்மார்ட் டிரைபிள் பார்மிங் என்ற பெயரில் வேளாண் திட்டங்கள் குறித்து விளக்க-மளித்தனர். இதன் ஒருங்கிணைப்பாளர் மைதிலி, மலைப்பகு-தியில் விளையும் பொருட்கள், அதை மதிப்பு கூட்டி சந்தைக்கு கொண்டு சென்றால் கிடைக்கும் விலை குறித்து விளக்கினார்.