உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல கோரிக்கை

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல கோரிக்கை

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள்பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல கோரிக்கைநாமக்கல், நவ. 16-'திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்களை, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி விழி பிதுங்குகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, முதலைப்பட்டியில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 12.90 ஏக்கர் நிலத்தில், கடந்த, 22ல் முதல்வர் ஸ்டாலின், புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். இந்த பஸ் ஸ்டாண்டில், 51 பஸ்கள் நிற்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 3 பயணிகள் காத்திருப்பு அறை, டிரைவர், கண்டக்டர் அறை, பாலுாட்டும் தாய்மார்கள் அறை, பொருட்கள் வைப்பு அறை, டூவீலர், கார் பார்க்கிங், ஏ.டி.எம்., மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 முதல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அனைத்து மப்சல் பஸ்களும் இயக்கப்படுகின்றன.அதன்படி, சேலத்தில் இருந்து வரும் பஸ்கள், நேரடியாக புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுவிடும். கோவை, ஈரோடு, மதுரை, கரூர் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பஸ்கள், நல்லிபாளையம், வள்ளிபுரம் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வேண்டும். திருச்சி, துறையூர் மற்றும் மோகனுார் வழித்தடத்தில் இருந்து வரும் பஸ்கள், அண்ணாதுரை சிலை அருகே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். ஆனால், திருச்சி, துறையூரில் இருந்து வரும் பஸ்கள், டிராவலர்ஸ் பங்களா முன் பயணிகளை இறக்கி செல்கின்றன.இந்த பஸ்கள் எதுவும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இதனால், பயணிகள் சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதேபோல், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பயணிகளும், டிராவலர்ஸ் பங்களா முன் காத்திருக்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் மப்சல் பஸ்கள் செல்லாததால், கடைகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக, 'ஆளில்லாத கடையில் டீ ஆத்தும் நிலைக்கு' தள்ளப்பட்டுள்ளனர். அதனால், 'திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை, பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறியதாவது:நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், சாலையோரம் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால், பழைய பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் இன்றி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், திருச்சி, துறையூர், மோகனுார் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்குவதுடன், கடைவீதி வழியாக, சேலம் சாலை சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ