உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதைப்பொருள் விற்ற 2 பேருக்கு குண்டாஸ்

போதைப்பொருள் விற்ற 2 பேருக்கு குண்டாஸ்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் போதைப்பொருள் விற்பதாக, கடந்த அக்., 9ல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், இடைப்-பாடி சாலை, காவேரி நகர், புதிய காவேரி பாலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக, 'ஹோண்டா மேஸ்ட்ரோ' டூவீலரில் சென்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், 40, இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த செந்தில், 45, என்பதும், போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்-தது. அவர்களிடமிருந்து, 3 கிலோ போதைப்பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று, கலெக்டர் உமா உத்தரவிட்டதையடுத்து, இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ